மொபைல் போன் திருடியவர் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மொபைல் போன் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டைச் சேர்ந்தவர் அசலன் மகன் மாணிக்கம், 37; விவசாயி. இவர், தனது மனைவியை பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு, மருத்துவமனையிலேயே தங்கியுள்ளார்.நேற்று அதிகாலை துாங்கிக் கொண்டிருந்த மாணிக்கத்திடம் இருந்து, மர்மநபர் மொபைல் போனை திருடியுள்ளார்.இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், அவர், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த உதய்குமார், 33; என்பதும், 3 மொபைல் போன்களை திருடியது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.