உள்ளூர் செய்திகள்

கொசு ஒழிப்பு பணி

சங்கராபுரம்: சங்கராபுரம் நகரில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடந்தது. சங்கராபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக கொசு உற்பத்தி அதிகமானது. இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையொட்டி சங்கராபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சங்கரன் உத்திரவின் பேரில் நகரில் உள்ள 15 வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை