மேலும் செய்திகள்
மனைவி, மகனுடன் என்.எல்.சி., தொழிலாளி தற்கொலை?
13-Feb-2025
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக இறந்தவரின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.நெய்வேலி டவுன்ஷிப்பை சேர்ந்தவர் முத்துக்குமரன்,53; என்.எல்.சி.,யில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 11ம் தேதி தனது மனைவி தேவி,36; மகன் பிரவீன்குமார்,12; ஆகியோருடன் தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகருக்கு வந்தார்.இந்நிலையில், மறுநாள் காலையில் தேவி மற்றும் பிரவீன்குமாரும் அதேபகுதியில் உள்ள கல் குட்டை யில் இறந்து கிடந்தனர். அங்கிருந்த 50 மீட்டர் துாரத்தில் உள்ள மரத்தில் முத்துக்குமரன் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுவரை மூவரின் இறப்பிற்கான காரணம் தெரியாத நிலையில், தேவியின் தாய் சிவகாமி நேற்று உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., பிரதீப்பிடம் மனு அளித்தார்.அதில், தனது மகள், மருமகன் மற்றும் பேரன் இறப்பில் சந்தேகம் உள்ளது. எனது மகள், மருமகனுக்கு எவ்வித குடும்ப மற்றும் பொருளாதார பிரச்னை இல்லை. மருமகன் முத்துக்குமரனின் குடும்பத்தினர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
13-Feb-2025