உள்ளூர் செய்திகள்

அன்னையர் தினவிழா

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சியில், சிறப்பு அன்னையர் தினவிழா நடந்தது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு குழந்தைகளின் அன்னையர் மற்றும் பாதுகாவலர்களை பாராட்டும் வகையில் சிறப்பு அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், பாடல், கவிதை, நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ், முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை