மேலும் செய்திகள்
சோலார் விளக்குகள் திருட்டு
29-Oct-2024
கள்ளக்குறிச்சி: கோட்டைமேடு அருகே நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கல்லுாரி வாகனங்கள் என நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. சுற்று வட்டார கிராம மக்கள் பலர் இரு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.வாகன போக்குவரத்து மிகுதியான சங்கராபுரம் சாலை குறுகியதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி நகரிலிருந்து ரோடுமாமந்துார் வரை சாலை அகலப்படுத்தப்பட்டு நடுவே தடுப்பு கட்டை அமைக்கப்பட்டது.பணிகள் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும், தடுப்பு கட்டையில் இதுவரை மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது.கோட்டைமேடு அருகே உள்ள வளைவு பகுதியில் உள்ள தடுப்பு கட்டை மிகவும் ஆபத்தான வகையில் உள்ளது. மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.மேலும், இரவில் வளைவு பகுதியை கடக்கும்போது அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே, பெரும் விபத்து ஏற்படுவதற்குள் நெடுஞ்சாலை துறையினர் மூலம் மின் விளக்குகள் அமைக்க கலெக்டர் பிரசாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
29-Oct-2024