உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கட்சி கொடி கம்பங்கள் அகற்றம் நகராட்சி, நெடுஞ்சாலை துறை அதிரடி

கட்சி கொடி கம்பங்கள் அகற்றம் நகராட்சி, நெடுஞ்சாலை துறை அதிரடி

உளுந்தூர்பேட்டை: உளுந்துார்பேட்டையில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். நெடுஞ்சாலையோரம் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.வினர் சாலையோரம் வைத்திருந்த கொடி கம்பங்களை அகற்றி கொண்டனர். ஆனால், மீதமுள்ள கம்யூ., பா.ம.க., வி.சி. கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்தது.இதைத் தொடர்ந்து, உளுந்துார்பேட்டை நகராட்சி பகுதியில் உள்ள கட்சி கொடிக்கம்பங்களை, நகராட்சி ஆணையர் புஸ்ரா, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வீரசிவாஜி ஆகியோர் தலைமையில், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.உளுந்துார்பேட்டை உழவர் சந்தை அருகே கொடிக்கம்பங்களை அகற்றும் போது, அங்கிருந்த காமராஜர் சிலையின் ஒரு கை சேதமடைந்தது. உடன் நெடுஞ்சாலைத் துறையினர் சேதம் அடைந்த கையை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ