மேலும் செய்திகள்
திருவாசகம் முற்றோதல்
02-Apr-2025
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே, சிவன் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தியாகதுருகம் அடுத்த வடதொரசலூர், திரிபுரசுந்தரி உடனமர் தான்தோன்றீஸ்வரர் கோவில் மற்றும் சுந்தர மூர்த்தி நாயனார் திருமடம் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பிரதோஷ நாயகர் நந்தியம் பெருமானுக்கும் சுயசாம்பிகை தேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின், தேவார திருவாசக திருப்பதிகங்கள் பாடி சிவனடியார்கள் முற்றோதல் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த வழிபாட்டில், சிவனடியார்கள் தங்கதுரை, ஜெய்சங்கர், பாலாஜி, பெரியசாமி உள்ளிட்டோ் கலந்து கொண்டனர்.
02-Apr-2025