உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம்

 தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம்

உளுந்துார்பேட்டை: டிச. 23-: எலவனாசூர்கோட்டை தெற்கு ஒன்றிய தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் திருமால் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் திருவேங்கடம், பொருளாளர் வீராசாமி, துணை செயலாளர்கள் முனியன், சிவா, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், நாராயணன், ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் குழந்தைவேல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். கூட்டத்தில் கடலுார் மாவட்டம் பாசாரில் நடக்க உள்ள மாநாட்டிற்கு உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றியம் சார்பாக அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும். எலவனாசூர்கோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். எலவனாசூர்கோட்டை கூட்டுறவு வங்கியில் தங்க நகை கடன், விவசாய கடன்கள் வழங்க வேண்டும், கர்ப்பிணிகள் மருத்துவ பரிசோதனைக்காக குஞ்சரத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வற்புறுத்துவதை தவிர்த்து, எலவனாசூர்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சுப்ரமணி, ஏழுமலை, கரண், சிவராமன், வெங்கடேசன், மணிக்கண்ணன், மணிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி