உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புதிய அங்கன்வாடி மைய பணிகள் துவக்கம்

புதிய அங்கன்வாடி மைய பணிகள் துவக்கம்

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே, புதிய அங்கன்வாடி மையம் அமைக்க பணிகள் துவங்கின.கச்சிராயபாளையம் அடுத்த ஏர்வாய்பட்டினம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சார்பில், ரூ.17.5 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து, கட்டடம் அமைப்பதற்கான பணிகள் நேற்று துவங்கின. நிகழ்ச்சிக்கு துணை சேர்மன் அன்புமணிமாறன் தலைமை தாங்கினார். ஊராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் பரந்தாமன், பி.டி.ஓ., சவரிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ஜோதிபன்னீர் வரவேற்றார். உதவி பொறியாளர் அருண்பிரசாத், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அருண்கோவிந்த் மற்றும் அரசு அதிகாரிகள், கிளைச் செயலாளர் அறிவழகன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் அய்யாவு, மணி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி