உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 48 குழந்தை மையங்களுக்கு ரூ. 5.92 கோடியில் புதிய கட்டடங்கள்

48 குழந்தை மையங்களுக்கு ரூ. 5.92 கோடியில் புதிய கட்டடங்கள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 48 குழந்தைகள் மையங்களுக்கு ரூ.5.92 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 900 கர்ப்பிணி பெண்களுக்கு ஆண்டுதோறும் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின்கீழ் 6 மாதத்திற்கு உட்பட்ட 2,788 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. 48 குழந்தைகள் மையங்களுக்கு ரூ. 5.92 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள், 182 குழந்தைகள் மையங்கள் ரூ. 3.13 கோடி மதிப்பில் சிறிய பழுதுகள் நீக்கி சீரமைப்பு பணியும், ரூ. 1 கோடி மதிப்பில் 100 குழந்தைகள் மையங்கள் சீர்மிகு குழந்தை மையங்களாக மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்கள் அனைவரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று மாவட்டத்தை ஊட்டச்சத்து நிறைந்த மாவட்டமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகளை பயனாளிகளுக்கு தொடர்ந்து உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை