உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் வேட்பு மனு

ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் வேட்பு மனு

திருக்கோவிலுார்: ஒன்றிய குழு உறுப்பினர் நியமன பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் முகையூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமன பதவி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மணம்பூண்டியில் உள்ள முகையூர் பி.டி.ஓ., அலுவலகத்தில், புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக சென்று, ஒன்றிய குழு நியமன உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் சிவராமனிடம் வழங்கினர். விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கர், வள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை