மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
19-Apr-2025
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே வட மாநில கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டம் நரசிங்பூர்பத்ரா அடுத்த லோக்கியா கிராமத்தை சேர்ந்தவர் யோகேந்திர பிரசாத்,45; இவர், தியாகதுருகம் அருகே உள்ள தனியார் மனைப்பிரிவு ெஷட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 7:00 மணிக்கு குளித்து விட்டு ஈரத்துடன், மொபைலில் சார்ஜ் போட சுவிட்ச் ஆன் செய்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19-Apr-2025