மேலும் செய்திகள்
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா
11-Jan-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம் துவக்க விழா நடந்தது.சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., உதவி இயக்குனர் மணிகண்டன் வரவேற்றார்.விழாவில் சின்னசேலம் பேரூராட்சி தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ், துணை தலைவர் ராகேஷ், செயல் அலுவலர் கணேசன் சிறப்புரையாற்றினர். கல்லுாரி முதல்வர்கள் பழனியம்மாள், பாஸ்கரன், பள்ளி உதவி தலைமையாசிரியர் சித்ரா, பள்ளி என்.எஸ்.எஸ்., இயக்குனர் சக்திவேல் வாழ்த்தி பேசினர். என்.எஸ்.எஸ்., இயக்குனர் ஆசைதம்பி திட்ட அறிக்கை வாசித்தார்.உதவி இயக்குனர் சுபஸ்ரீ நன்றி கூறினார்.
11-Jan-2025