உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்லை தமிழ் சங்கம் சார்பில் நுால் வெளியீட்டு விழா

கல்லை தமிழ் சங்கம் சார்பில் நுால் வெளியீட்டு விழா

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் கல்லைத் தமிழ்ச் சங்கம் சார்பில் சங்க இலக்கிய தொடர் சொற்பொழிவு மற்றும் நுால் வெளியீட்டு விழா நடந்தது.சங்க சிறப்பு தலைவர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார். கோமுகி தாசன், வணிகர் சங்க பேரவை பொருளாளர் முத்துகருப்பன், செயலாளர் மணி முன்னிலை வகித்தனர். துணை தலைவர் அம்பேத்கர் வரவேற்றார்.சங்க தலைவர் சவுந்தரராஜன், இலக்கிய மன்ற தலைவர் ஜெயராமன், டாக்டர் நடேசன் ஆகியோர் திருக்குறள் அதிகாரம், சங்க இலக்கிய தொடர், கம்பனில் கற்போம் தலைப்புகளில் சொற்பொழிவாற்றினர்.எழுத்தாளர் பரிக்கல் சந்திரன் எழுதிய குறள் சூரியன் தொகுதி-2 என்ற நுாலை புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலைய துணை இயக்குனர் செந்தில்குமார் வெளியிட சங்க தலைவர் சம்பத் பெற்றுக் கொண்டார். பேரவை தலைவர் ஆராவமுதன், முத்தமிழ் முத்தன், இளமாறன், ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் வாழ்த்திப் பேசினர். கோபால், கொளஞ்சியப்பா, சித்திரைசெல்வி உட்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் மதிவாணன் தொகுத்து வழங்கினார். செய்தி தொடர்பாளர் கலைமகள் காயத்ரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ