ஓம்முருகா குரூப் நிறுவனர் நினைவு தினம் அனுசரிப்பு
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் ஓம் முருகா குரூப் நிறுவனரின் மூன்றாமாண்டு நினைவு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி ஓம் முருகா குரூப் நிறுவனர் தேவநாதனின் மூன்றாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சாமியார் மடம் பகுதியில் உள்ள ஓம் முருகா டிராக்டர்ஸ் நிறுவனத்தில், மறைந்த தேவநாதனின் உருவபடத்தை, அவரது தந்தை ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் வீரமணி - தாய் புனிதா, மகள் சீதாலட்சுமி ஆகியோர் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினர். காலை 11 மணியளவில் சாமியார் மடம் அரசு மகப்பேறு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, நீலமங்கலம் நரிகுறவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஓம் முருகா குரூப்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் உடனிருந்தனர். ஓம் முருகா தேவா நினைவு அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பல்வேறு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.