உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி

விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த மூக்கனுார் கிராமத்தில் அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். துணை வேளாண் அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா வரவேற்றார். மண் பரிசோதனை, தக்கை பூண்டு, சனப்பை விதைத்தல், விதை நேர்த்தி, உயிர் உரங்களின் பயன்பாடு, கால நிலைகளுக்கு ஏற்ற பயிர்களை தேர்வு செய்தல், நுண்ணுாட்ட உரங்களின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் பழனிவேல், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்குமார், யோகப்பிரியா மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை