உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.கடலுார் மாவட்டம், எடசித்துார் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் கொளஞ்சி, 45. இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, தனது பைக்கில் உளுந்துார் பேட்டை அடுத்த அஜீஸ் நகர் அருகே, திருச்சியில் இருந்து சென்னை மார்க்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் சென்றார். அப்போது, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், பைக் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட கொளஞ்சியை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி கொளஞ்சி இறந்தார். இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ