உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாடகை அடிப்படையில் தனியார் பஸ்கள் இயக்கம்

வாடகை அடிப்படையில் தனியார் பஸ்கள் இயக்கம்

கள்ளக்குறிச்சி: தீபாவளி பண்டிகையையொட்டி, பயணிகள் வசதிக்காக, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், கள்ளக்குறிச்சியில் இருந்து வாடகை அடிப்படையில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டது.தீபாவளி பண்டிகையையொட்டி அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட வெளி மாவட்டங்களில் தங்கி பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர்.இதனால் கடந்த 2 நாட்களாக பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், போதுமான பஸ்கள் இல்லாததால், கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களை, அரசு போக்குவரத்துக்கழகம் வாடகை அடிப்படையில் எடுத்து இயக்கி வருகிறது.தனியார் பஸ்களின் முகப்பு பகுதியில், சிறப்பு பஸ் இயக்கம் எனவும், எந்த வழி மார்க்கத்தில் இயக்கப்படுகிறது என்பதற்கான போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது.இந்த பஸ்களில் கண்டெக்டர் மட்டுமே அரசு ஊழியராக இருப்பர். கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் மற்றும் சென்னைக்கு வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த சிறப்பு பஸ்கள், பண்டிகை முடியும் வரை இயக்கப்படும் என, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ