உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேசிய அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டி ஆக்ஸாலிஸ் மாணவர் 2ம் இடம் பிடித்து சாதனை

தேசிய அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டி ஆக்ஸாலிஸ் மாணவர் 2ம் இடம் பிடித்து சாதனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆக்ஸாலிஸ் பள்ளியில் பயிலும் 4ம் வகுப்பு மாணவர் ரோப் ஸ்கிப்பிங் போட்டியில் தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம், போபாலில் தேசிய அளவில் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கான 'ரோப் ஸ்கிப்பிங்' விளையாட்டுப் போட்டி, கடந்த 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடந்தது. இதில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 14 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் என இரண்டு பிரிவுகளில் 5 வகை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 'ஸ்பீடு எண்டுயரன்ஸ்' வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் ஸ்ரீபிரித்திமனா என்ற மாணவர், தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தார். சிறப்பிடம் பெற்ற மாணவனை பள்ளியின் தாளாளர் பாரத்குமார், செயலாளர் சாந்தி பாரத்குமார் பாராட்டினர். தொடர்ந்து, மாணவன் ஸ்ரீபிரித்திமனா, கலெக்டர் பிரசாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், ஆக்ஸாலிஸ் பள்ளி முதல்வர் ஜாய்ஸ்ரெக்ஸி, உடற்கல்வி ஆசிரியர் பரசுராமன் மற்றும் பெற்றோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !