உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம் ..

ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம் ..

கள்ளக்குறிச்சி; தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்க மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் முத்துசாமி, சாந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், வட்ட தலைவர் அன்பழகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.ஊதிய குழு பரிந்துரைகளில் இருந்து நீக்கி வைக்கும் நிதி மசோதா சட்டத்தை ரத்து செய்தல், 4 தொகுப்பாக சுருக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்தல், ஓய்வூதியர் நிதி ஒழுங்காற்று சட்டத்தை ரத்து செய்து, ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி தருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் கேசவ ராமானுஜம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி