ஏமப்பேர் குளம் வறண்டதால் போட்டிங் செல்ல முடியாமல் மக்கள் ஏமாற்றம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் குளத்தில் தண்ணீர் இல்லாமல் குறைந்து மாசடைந்ததால் போட்டிங் செல்ல முடியாமல்பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி, ஏமப்பேரில் உள்ள குளம் மற்றும் சுற்றுப் பகுதிகள் மேம்படுத்தப்பட்டு பொது மக்களுக்கானபொழுது போக்கும் இடமாக மாற்றப்பட்டது. குளத்தில் போட்டிங் வசதி, சிறுவர்கள் விளையாட பூங்கா, பெரியவர்கள்நடைபயணம் செய்ய நடைபாதை, சிறுவர்களுக்கான நீச்சள் குளம் உள்ளிட்ட பலவித பொழுதுபோக்குஅம்சங்களுடன் இப்பகுதி சீரமைக்கப்பட்டது.இதனால் கள்ளக்குறிச்சி நகர பகுதி மக்களின் முக்கிய பொழுதுபோக்குஇடமாக ஏமப்பேர் மாற்றப்பட்டது.தினசரி 200க்கும் மேற்பட்ட மக்கள் குழந்தைகளுடன்இங்கு வந்து விளையாடி மகிழ்ந்தனர்.ஆனால் சில தினங்களாக இந்த குளத்தில் தண்ணீர் குறைந்து மாசடைந்துள்ளது. இதனால் போட்டிங் செய்ய முடியாததால்தினசரி இந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.படிப்படியாக இங்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்துள்ளது.எனவே, குளத்தை துாய்மைப்படுத்தி தண்ணீர் விட்டு போட்டிங் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை மக்களின்பொழுதுபோக்கு தேவைக்கு விட வேண்டும் எனஇப்பகுதி மக்கள் கோரிககை விடுக்கின்றனர்.