மேலும் செய்திகள்
பெரியப்பட்டு பிரித்தியங்கரா கோவில் கும்பாபிஷேகம்
15-Oct-2024
கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
22-Oct-2024
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை மிளகு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.அதனையொட்டி கடந்த 6ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் மாலை யாக பூஜை நடந்தது. நேற்று காலை பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, 8:00 மணிக்கு யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, 8:30 மணிக்கு கோவில் விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றுப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 9:00 மணிக்கு மூலஸ்தானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
15-Oct-2024
22-Oct-2024