சாலையில் தேங்கும் மழைநீர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், சாலை, கழிவுநீர் வாய்க்கால் வசதி கோரி, மனு அளிக்கப்பட்டுள்ளது. க.மாமனந்தல் கிராம எல்லையில் மோரைத்தெரு, கிருஷ்ணா நகர் பகுதியில் 3 தெருக்கள் உள்ளன. இங்கு பொதுமக்கள் பலர் வீடு கட்டி வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில், கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லை. சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. மழைக்காலத்தில் சாலையில் அதிகளவு தண்ணீர் தேங்குகிறது. தெருக்களில் பெயர் பலகை மற்றும் வீடுகளில் கதவு எண் குறிப்பிடாமல் உள்ளனர். இதனால் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்களில் கதவு எண் குறிப்பிட்டு, முகவரி பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.