உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலையில் கழிவுநீர் தேக்கம் ராவத்தநல்லுாரில் மறியல்

சாலையில் கழிவுநீர் தேக்கம் ராவத்தநல்லுாரில் மறியல்

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லுாரில் பள்ளிவாசல் அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராவத்தநல்லுாரில் உள்ள பள்ளிவாசல் அருகே கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுகப்படவில்லை.இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை 8:00 மணிக்கு ராவுத்தனுார் பள்ளிவாசல் முன், சேராப்பட்டு சாலையில் மறியல் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வடப்பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில் 2 நாட்களில் கழிவு நீரை அகற்றுவதாக கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் 9:00 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை