மேலும் செய்திகள்
226 பள்ளிகளில் பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம்
08-Feb-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 117 மையங்களில் பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு துவங்கியது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 77 அரசு மற்றும் 10 அரசு உதவி பெறும் பள்ளிகள், 52 தனியார் பள்ளி என, மொத்தம் 139 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. பிளஸ் 1 வகுப்பிற்கு பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி துவங்க உள்ளது.செய்முறைத் தேர்வு 117 மையங்களில் நேற்று துவங்கியது.இதற்காக, மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைகேற்ப பல்வேறு 'பேட்ஜ்'களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒரு 'பேட்ஜில்' 25 பேர் மட்டுமே பங்கேற்றனர்.இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் என, 6 பாடப் பிரிவுகளில் 20 மதிப்பெண்களுக்கு இரண்டரை மணி நேரம் தேர்வு நடந்தது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செய்முறைத் தேர்வை சி.இ.ஓ., கார்த்திகா ஆய்வு செய்தார்.
08-Feb-2025