மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
20-Sep-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் பா.ம.க., தலைவர் அன்புமணி பிறந்த நாளை கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினர். கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் நடந்த விழாவிற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கி, கேக் வெட்டினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நகர செயலாளர் செல்வசீனுவாசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்,ஏ., காசாம்பு பூமாலை, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மணிவண்ணன், மாநில இளைஞர் சங்க நிர்வாகி முத்துவேல், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் பாபு, மாவட்ட பொருளாளர் பூங்கொடி, வன்னியர் சங்க பொருளாளர் கிருஷ்ணன். மாவட்ட துணைச் செயலாளர் சீனு, வழக்கறிஞர் ராஜிவ்காந்தி, ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன், பாலு, ராமச்சந்திரன், ஐயப்பன், ராஜா, தங்கராசு, முருகன், பேரூர் செயலாளர்கள் மணிமாறன், குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர் .
20-Sep-2025