உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை

இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சவிதா,20; 'நர்சிங்' படித்து முடித்து, தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த, 30 ம் தேதி மாட்டுக்கு தீவனம் வைக்க செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றவர், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர் பல இடங்களில் அவரை தேடினர். ஆனால் சவிதாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து எழுந்த புகாரையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி