உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை

தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மாயமான தாய் மற்றும் மகளை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த எடுத்தவாய்நத்தத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி விஜயலட்சுமி,49; கடந்த ஓராண்டிற்கு முன் குடும்ப பிரச்னை காரணமாக, விஜயலட்சுமி கணவரை பிரிந்தார். தொடர்ந்து, ரங்கநாதபுரத்தில் மகள் ஆனந்தி, 29; உடன் வசித்து வந்தார். கடந்த, 24 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற தாய், மகள் இருவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. ராமச்சந்திரன் புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி