உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஸ்கூட்டி திருட்டு போலீஸ் விசாரணை

ஸ்கூட்டி திருட்டு போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்,47; பேக்கரி பணியாளர். இவர் கடந்த மே 23ம் தேதி கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் உள்ள பொதுகழிப்பிடம் அருகே தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, பணிக்கு சென்றார். தொடர்ந்து, சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் வந்து பார்த்த போது ஸ்கூட்டி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி