உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதியவர் மாயம் போலீஸ் விசாரணை

முதியவர் மாயம் போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே காணாமல் போன முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரை சேர்ந்தவர் வேலாயுதம்,68; இவர் கடந்த, 21ம் தேதி காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும், அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து எழுந்த புகாரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.அதேபோல, பா.கிள்ளனுாரை சேர்ந்தவர் கண்ணன் மகள் சந்தியா,25; கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கேட்டரிங் பயிற்சி மையத்தில் படிக்கிறார். கடந்த 24ம் தேதி பயிற்சி மையத்திற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை