உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மூதாட்டி மாயம் போலீஸ் விசாரணை

மூதாட்டி மாயம் போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மயமான மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்தவர் தனலட்சுமி, 73; இவரது மகன் சிவக்குமார் மற்றும் குடும்பத்தினர் கடந்த 7ம் தேதி உறவினர் வீட்டிற்கு சென்றனர். தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். சில மணி நேரத்திற்கு பிறகு சிவக்குமார் வீடு திரும்பியபோது, தனலட்சுமி வீட்டிலிருந்து மாயமானார். மாயமான தனது தாயை கண்டுபிடித்து தருமாறு சிவக்குமார் போலீசில் புகார் அளித்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை