உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி

காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியின்போது வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்றுகள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. எஸ்.பி., மாதவன் தலைமை தாங்கினார். கருப்பு பட்டை அணிந்து, 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி.,க்கள் சரவணன், திருமால், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை