உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போலீஸ்காரரின் பைக் திருட்டு

போலீஸ்காரரின் பைக் திருட்டு

திருக்கோவிலுார், ; காவலர் குடியிருப்பில் பைக்கை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருக்கோவிலுார் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணிபுரிபவர் அசோக்குமார்,35; இவர், கடந்த 12ம் தேதி இரவு தனது பைக்கை சந்தைப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி விட்டு பணி நிமித்தமாக கள்ளக்குறிச்சி சென்றார். மறுநாள் காலை 8:00 மணிக்கு மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணாதது அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து பைக்கை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி