மேலும் செய்திகள்
அர்த்தநாரீஸ்வர் கோவில் தேரோட்டம்
11-Apr-2025
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ரிஷிவந்தியத்தில் உள்ள பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், சித்திரை மாத சனி பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி மூலவர் சுயம்பு லிங்கம் மற்றும் கொடி கம்பத்திற்கு அருகே உள்ள நந்திபகவானுக்கு பால், தயிர், இளநீர், தேன் உட்பட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து பல வண்ண மலர்களால் நந்தி பகவான் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள் செய்தனர்.
11-Apr-2025