உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து  பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து  பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி; தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி டோல்கேட் அருகே உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.தெய்வீகன், கலியபெருமாள், காமராஜ், பொருளாளர் ஆர்.தெய்வீகன் முன்னிலை வகித்தனர். ஊதிய ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் பெற்று வந்த சம்பளத்தின் மீது 20 சதவீத ஊதிய உயர்வு எவ்வித நிபந்தனையின்றி அனுமதிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிறுத்தி வைத்துள்ள ஓய்வு கால நிதி பயன்கள் விடுவிக்க வேண்டும். தேவையற்ற இடங்களில் முதல்வர் மருந்தகம் திறந்து நாள்தோறும் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர்கள் ரமேஷ், கந்தசாமி, நாராயணசாமி, கலைச்செல்வன், சீனுவாசன், இணை செயலாளர்கள் ராகவேந்திரன், முனுசாமி, ஜெயவேல், கோவிந்தம்மாள் உட்பட அனைத்து பணியாளர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !