உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போக்சோ வழக்கில் கைதான தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

போக்சோ வழக்கில் கைதான தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே சிறுமிகளிடம் ஆபாச படங்களை காண்பித்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஆர்.ஆர். குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் துரையரசன், 52; ஒலையனுார் ஆதிதிராவிடர் நல ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியர். இவர், பள்ளியில் படிக்கும் சிறுமிகளிடம் மொபைல் போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர், உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மகளிர் போலீசார் விசாரணையில், தலைமை ஆசிரியர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து துரையரசனை கைது செய்தனர். இதனிடையே, தலைமை ஆசிரியர் துரையரசனை சஸ்பெண்ட் செய்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தாமரைமணவாளன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை