உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எம்புரான் திரைப்படத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எம்புரான் திரைப்படத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, கச்சேரி சாலையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், 'எம்புரான்' திரைப்படத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜீவ்காந்தி முன்னிலை வகித்தார்.இதில் பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'எம்புரான்' திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்ற வசனத்தை சென்சார் செய்யாத மத்திய தணிக்கை வாரியத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் அந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் அர்ஜுனன், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை