உள்ளூர் செய்திகள்

கண்டன ஆர்ப்பாட்டம்

சின்னசேலம்; சின்னசேலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சின்னசேலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. பஸ் ஸ்டாண்டில் குறிப்பிட்ட அளவை விட கூடுதல் கடைகள் கட்டப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சர்புதீன், தலைவர் சிலம்பரசன், மாநில இணைச்செயலாளர் அஜித்குமார் முன்னிலை வகித்தனர்.ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர், ரமேஷ் பெருவழுதி, சரவணன், அருள்இனியன், அன்பு தென்னரசு, ஆல்பர்ட் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி