உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 28 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 360 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் நபர்களிடமிருந்து 17 மனுக்கள் என மொத்தமாக 377மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்து வருமானம் ஈட்டும் வகையில் 4 பேருக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்களும், இயற்கை மரணமடைந்த 8 பேருக்கு ஈமசடங்கு உதவித்தொகையாக ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்துக்கான காசோலையும், கல்வி உதவித்தொகையாக 16 பேருக்கு ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.அப்போது, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குப்புசாமி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை