பி.டி.ஓ., அலுவலக கட்டுமான பணி; ஒன்றிய சேர்மன் ஆய்வு
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டையில் ரூ.6 கோடியில் கட்டப்படும் பி.டி.ஓ., அலுவலக கட்டுமான பணியை ஒன்றிய சேர்மன் ஆய்வு செய்தார். உளுந்துார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கடந்த 1973ம் ஆண்டு கட்டப்பட்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது இக்கட்டடம் பழுதடைந்ததால், ரூ. 6 கோடி மதிப்பில், 9,400 சதுரடி பரப்பில் புதிய ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி கடந்த மாதம் துவக்கி வைக்கப்பட்டது. 6 மாத காலத்திற்குள் பணி முடிக்க வேண்டும். பி.டி.ஓ., கட்டுமான பணியை ஒன்றிய சேர்மன் ராஜவேல் நேற்று ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது, பி.டி.ஓ.,க்கள் முருகன், ஜெயராமன், மேலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.