உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் தீர்வு காண வேண்டும்

பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் தீர்வு காண வேண்டும்

கள்ளக்குறிச்சி: பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு குறிப்பிட்ட கால அளவிற்குள் தீர்வு காண வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் துறை வாரியான திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதனன், திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்து துறை அலுவலர்களிடம் தனித்தனியாக கேட்டறிந்து ஆய்வு செய்தார்.ஆய்வில், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா, நகராட்சி, ஊரக வளர்ச்சி, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட கால அளவிற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.அதேபோல் நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் மூங்கில்துறைப்பட்டு மேலாண் இயக்குனர் கண்ணன், திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !