உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொது விநியோக திட்ட குறைகேட்பு கூட்டம்

பொது விநியோக திட்ட குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி,: கள்ளக்குறிச்சியில் நடந்த பொது விநியோக குறைகேட்பு முகாமில் 29 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமிற்கு குடிமை பொருள் தனி தாசில்தார் பிரபாகரன் தலைமை தாங்கினார். முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் 3, நீக்குதல் 3, முகவரி மாற்றம் 2, மொபைல் எண் மாற்றம் 9, பெயர், பிறந்த தேதி, புகைப்படம் திருத்தம் 12 என மொத்தம் 29 மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெரியதமிழன், இளநிலை வருவாய் ஆய்வாளர் ஜெயஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.

ரிஷிவந்தியம்

வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் பழனி, தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் முன்னிலை வகித்தனர்.முகாமில், ரேஷன் கார்டில் உறுப்பினர் நீக்கம், முகவரி மாற்றம், புதிதாக உறுப்பினர்களை சேர்த்தல், தொலைபேசி எண் மாற்றுதல், அங்கீகார சான்று, பிறந்த தேதி திருத்தம், புகைப்படம் மாற்றுதல் தொடர்பாக 26 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ