மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
07-Jan-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், 461 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனைப்பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக மொத்தம் 461 மனுக்களை பெற்றார்.தொடர்ந்து, மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் குறைபாடுடைய 6 பேருக்கு தலா ரூ.6,000 மதிப்புள்ள காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டது. முகாமில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
07-Jan-2025