உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதி

சங்கராபுரத்தில் சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதி

சங்கராபுரம்: சங்கராபுரம் தாலுக்கா அலுவலகம் செல்லும் சாலை சேறும் சகதி மற்றும் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சங்கராபுரம் - பாலமேட்டிற்கு செல்லும் வழியில் கடந்த 30 ஆண்டுகளாக சங்கராபுரம் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. சுற்று வட்டார பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் பணி நிமித்தம் காரணமாக தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர். மேலும் தாலுகா அலுவலகம் அருகே தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது. அதேபோல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இச்சாலை போக்குவரத்துக்க லாயக்கற்ற நிலையில் உள்ளதால் சாலையை சீரமைக்ககோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிகளவில் பயன்படுத்த கூடிய தாலுகா அலுவலகம் செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை