உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆக்கிரமிப்புகள் அகற்றம்: கலெக்டர் அறிவுறுத்தல்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: கலெக்டர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பான, ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் கோர்ட் உத்தரவுப்படி மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பான பணிகளின் நிலை, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குறைதீர் கூட்டங்களில் பெறப்படும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பான மனுக்கள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தொடர்ந்து, கலெக்டர் பிரசாந்த் பேசுகையில், ' ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பான நிலுவை மனுக்கள் மீது அதிகாரிகள் நேரடி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மனுவின் உண்மை தன்மைக்கேற்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து, தனிக்கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும்,' என்றார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை