உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை தாசில்தார் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும். காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து தாலுகா அலுவலக வாயில் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் ஜெயகணேஷ் தலைமையில் மாவட்ட மகளிர் அணி மீனாட்சி, புவனேஸ்வரி, வட்ட தலைவர் விஸ்வநாதன், செயலாளர் முத்துகுமார், வட்ட பொருளாளர் சபீர் அகமது உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை