உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆற்று திருவிழா ஆயத்த கூட்டம்

ஆற்று திருவிழா ஆயத்த கூட்டம்

சங்கராபுரம் : சங்கராபுரம் மணி நதியில் பொங்கல் பண்டிகையையொட்டி காணும் பண்டிகை தினத்தன்று ஆற்று திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு ஆற்று திருவிழா நடத்துவது தொடர்பான ஆயத்த கூட்டம் வாசவி மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். குணசேகரன், தர்மகர்த்தா பாலசுப்ரமணியன், வள்ளலார் மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன், குசேலன் முன்னிலை வகித்தனர். மளிகை பிரிவு தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில், முன்னாள் ரோட்டரி தலைவர் மூர்த்தி, ஆறுமுகம், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சக்ரவர்த்தி, பழனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காணும் பொங்கலை முன்னிட்டு சங்கராபுரம் மணி நதியில் ஆற்று திருவிழா மற்றும் தீர்த்தவாரி உற்சவம் நடத்துவது, மாலையில் கலை நிகழ்ச்சி நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி