சாதனை மாணவர்களை உருவாக்கும் ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்கள் : சேர்மன் மகுடமுடி பெருமிதம் சேர்மன் மகுடமுடி பெருமிதம்
கிராமப்புற மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி, நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் கல்லுாரியாக ஆர்.கே.எஸ்., உள்ளது என சேர்மன் மகுடமுடி கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 27 ஆண்டுகளாக கல்விக்கு முதலிடமும், ஒழுக்கத்திற்கு சிறப்பிடமும் கொடுத்து சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 9 இளங்கலை, 8 முதுகலை, 2 இளமுனைவர், ஒரு முனைவர் பாடப்பிரிவுகளுடன் இயங்கிய வந்த நிலையில், தற்போது, பி.எஸ்.சி., செயற்கை நுண்ணறிவு, மைக்ரோபயாலஜி மற்றும் பி.ஏ., வரலாறு ஆகிய 3 பாடப்பிரிவுகள் புதியதாக துவங்கப்பட்டுள்ளன. இதுவரை 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்று, அரசு மற்றும் தனியார் துறைகளில் சேர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - டி.என்.பி.எஸ்.சி., போன்ற போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த பேச்சு, கட்டுரை போட்டிகளில் ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று சாதித்து வருகின்றனர். கல்லுாரி வளாகத்தில் கிரிக்கெட், கபடி, கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து உள்ளிட்ட அனைத்து விளையாட்டிற்கும் தனி, தனி மைதானங்கள் உள்ளன. மாணவர்களின் அறிவுத்திறனை மேன்மேலும் வளர்க்கும் விதமாக பல்துறை அறிஞர்கள் மூலம் பன்னாட்டு, தேசிய, மாநில அளவிலான கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு முன்னனி நிறுவனங்கள் மூலம் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வேலைவாய்ப்புகள் பெற்றுத்தரப்படுகிறது. அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற்று தரப்படுகிறது. பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடமும், தங்கப்பதக்கமும், 24 பதக்கங்களையும் பெற்று தமிழக அளவில் சாதனை படைத்துள்ளது. போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக 'டெட்' மற்றும் 'டி.ஆர்.பி.,' தேர்வுகளுக்கு தனி கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று தொடர் சாதனை படைத்து வருகிறது. யோகா, கராத்தே, பரதம், ஓவியம், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஆர்.கே.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில், சுகாதார ஆய்வாளர் மற்றும் தாய்மை துணை செவிலியர் பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு பயிலும் மாணவர்களுக்கு அனுபவமிக்க மருத்துவர்களால் பயிற்சி வகுப்புகளும், சிறப்பு கருத்தரங்குகளும் நடத்தப்படுகிறது. ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காற்றோட்டமான தனித்தனி விடுதிகள் உள்ளன. குறைந்த கட்டணத்தில், தரமான உணவுகள் வழங்கப்படுகிறது. பெற்றோர்களுக்கும், சமுதாயத்திற்கும் பெருமைமிக்க மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனத்தின் உயரிய நோக்கம். இவ்வாறு சேர்மன் மகுடமுடி கூறினார்.