உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கழிவுநீர் பிரச்னையால் சாலை மறியல்

கழிவுநீர் பிரச்னையால் சாலை மறியல்

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சாலையில் கழிவுநீர் செல்கிறது. இதை முறையாக கால்வாய் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி மக்கள் 'திடீர்' சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என போலீசார் உறுதி அளித்ததால், போராட்டம் கை விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை