உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பசு மாடுகளை திருடி இறைச்சி கடையில் விற்பனை கண்டுபிடிக்காத போலீசை கண்டித்து சாலை மறியல் எலவனாசூர்கோட்டையில் பரபரப்பு

பசு மாடுகளை திருடி இறைச்சி கடையில் விற்பனை கண்டுபிடிக்காத போலீசை கண்டித்து சாலை மறியல் எலவனாசூர்கோட்டையில் பரபரப்பு

உளுந்துார்பேட்டை: எலவனாசூர்கோட்டையில் திருடுபோன பசுமாடுகளை கண்டுபிடிக்காத போலீசாரை கண்டித்தும், மாடுகளை திருடி கொலை செய்து இறைச்சி கடையில் விற்பனை செய்த கடை உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை நம்பிக்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா, 56; விவசாயி. இவரது பசு மாடு நேற்று முன்தினம் திருடுபோனது. இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துவிட்டு, கருப்பையாவும், அவரது மனைவி குப்பு பசு மாட்டை பல இடங்களில் தேடினர்.எலவனாசூர்கோட்டையில் ஆசனுார் செல்லும் சாலை, மேம்பாலம் அருகே அதே கிராமம், காக்காதோப்பு பகுதியை சேர்ந்த அஷ்ரப்அலி என்பவரின் இறைச்சி கடையில், கருப்பையாவின் பசு மாடு இறைச்சிக்காக வெட்டி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அஷ்ரப் அலியிடம் கேட்டபோது, அவர் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.இதேபோல் நம்பிக்குளம் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரின் மாடுகளும் கடந்த சில நாட்களில் திருடுபோய் உள்ளது. திருடப்பட்ட பசுமாடுகளை கண்டுபிடிக்க போலீசார் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் போலீசாரை கண்டித்தும், பசு மாடுகளை திருடி கொலை செய்து, இறைச்சி கடையில் விற்பனை செய்த கடை உரிமையாளர் அஷ்ரப் அலியை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று காலை 8:30 மணிக்கு, எலவனாசூர்கோட்டையில் ஆசனுார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எலவனாசூர்கோட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். காலை 9:00 மணிக்கு மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டத்தை தொடர்ந்து, அஷரப்அலியின் தாய் ஷாகிராபீ, 50; இறைச்சி கடையில் வேலை செய்த ஏழுமலை மகன் பரத், 20; மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய அஷ்ரப்அலியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி